சனி, 19 ஆகஸ்ட், 2017

ஜூன் மாத செயல்பாட்டு அறிக்கை:


தொன்மைப் பாதுகாப்பு மன்றம் (Heritage Club)
 
ஜூன் மாத அறிக்கை (2017)
 
 
 
அரசு மேல்நிலைப் பள்ளி
 
காட்டூர் – 610104
 
திருவாரூர் மாவட்டம்
 



எம்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் (Heritage Club) மன்ற ஜூன் மாத செயல்பாட்டு அறிக்கை:
 


 


யுனெஸ்கோ நிறுவனத்தின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களை அறிந்துகொள்ளுதல்:
 
யுனஸ்கோவின் நோக்கங்கள்:
 
  • கல்வி, அறிவியல், பண்பாடு, செய்தித் தொடர்பு ஆகியவற்றின் வாயிலாக உள் கலாச்சார உரையாடல்களை மேம்படுத்துதல்.
  • சமாதானத்தை ஏற்படுத்துதல்,
  • வறுமையைக் குறைத்தல்
  • தொடர் முன்னேற்றத்தை மேம்படுத்துதல்
 
 
 
இந்திய பாரம்பரியச் சின்னங்கள்
 
  • ஆக்ரா கோட்டை (1983), உத்தரப்பிரதேசம
  • அஜந்தா குகைகள் (1983), மகாராஷ்டிரா
  • சாஞ்சியிலுள்ள பவுத்த நினைவுச்சின்னங்கள், மத்தியப்பிரதேசம்
  • சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா, குஜராத்
  • சத்திரபதி சிவாஜி முனையம் (முன்னதாக விக்டோரியா முனையம்), மகாராஷ்டிரம்
  • கோவாவின் தேவாலயங்களும் மடங்களும், வெல்ஹா,கோவா (பழைய கோவா), கோவா
  • எலிபண்டா குகைகள், மகாராஷ்டிரா
  • எல்லோரா குகைகள், மகாராஷ்டிரா
  • ஃபதேப்பூர் சிக்ரி, உத்தரப்பிரதேசம்
  • அழியாத சோழர் பெருங்கோயில்கள், தமிழ்நாடு
  • ஹம்பியிலுள்ள நினைவுச்சின்னங்கள், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா
  • மாமல்லபுர மரபுச்சின்னங்கள், மகாபலிபுரம்,தமிழ்நாடு
  • பட்டடக்கலிலுள்ள நினைவுசின்னங்கள், பட்டடக்கல், கர்நாடகா
  • ஹூமாயூனின் சமாதி, தில்லி
  • ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்), ஜெய்ப்பூர்,இராஜஸ்தான்
  • காசிரங்கா தேசியப் பூங்கா, அசாம்
  • கேவலாதேவ் தேசியப் பூங்கா, பரத்பூர், இராஜஸ்தான்
  • கஜுராஹோவிலுள்ள நினைவுச்சின்னங்கள், மத்தியப் பிரதேசம்
  • மகாபோதி கோயில், புத்த கயா, பீகார்
  • மானசு வனவிலங்கு காப்பகம், அசாம்
  • இந்திய மலைப்பாதை தொடருந்துகள்: டார்ஜிலிங், நீலகிரி, கல்கா-சிம்லா
  • நந்தாதேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா, சமோலி மாவட்டம், உத்தராஞ்சல்
  • குதுப் மினார் வளாகம், தில்லி
  • செங்கோட்டை வளாகம், தில்லி
  • பீம்பேட்கா பாறை வாழிடங்கள், மத்தியப் பிரதேசம்
  • சுந்தர வனத் தேசியப் பூங்கா, மேற்கு வங்காளம்
  • கொனார்க் சூரியன் கோயில், பூரி மாவட்டம், ஒடிசா
  • ராணியின் குளம், பதான் மாவட்டம், குஜராத்
  • தாஜ் மகால், ஆக்ரா, உத்தரப் பிரதேசம்
  • மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (2012) : தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத்
  • நாளந்தா பல்கலைக்கழகம்(2016), பீகார்
  • அகமதாபாத் நகரம்(2017) , அகமதாபாத், குஜராத்
 
 


மாமல்லபுர மரபுக்கோயில்கள் (1984)
 
 


யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ள மாமல்லபுரக் கோயில்கள் நான்கு வகைப்பட்டவை.

  • மாமல்லபுரம் ரதக் கோயில்கள் குகைக்கோயில்கள் (அ) மண்டபங்கள்,  வராக குகைக்கோயில், கிருஷ்ண குகைக்கோயில்
  • மாமல்லபுரம் பஞ்சபாண்டவர் மண்டபம் மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம்
  • அர்ச்சுனன் பாவசங்கீத்தனம் என்றழைக்கப்படும் மாமல்லபுர கங்கை மரபுவழி சின்னங்கள்.
  •  மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் (சிவன் கோயில்)
 
 


அழியாத சோழர் பெருங்கோயில்கள் (1987)
 
  • தஞ்சாவூர்   பிரகதீஸ்வரர் கோவில்
  • கங்கைகொண்ட சோழபுரம் 
  •  தாராசுரம்   ஐராவதேஸ்வரர் கோயில்
 
 
நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து (1995)
 
 
  • சிம்லா மலைப்பாதை
  • டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே
  • மாதேரன் மலைப்பாதை
 
    உதகமண்டலத்திற்கும் மேட்டுப்பாளையத்திற்கும் இடையே 46 கி.மீ செல்லும் இந்த தொடருந்துப் பாதை இந்தியாவின் ஒரே பற்சட்ட இருப்புப்பாதை (rack railway) ஆகும். (பற்சட்ட இருப்புப் பாதை லாமெல்லா முறை பற்சட்டத்தை பயன்படுத்துதல்)
 
 
 
 
  • இத்தகவல்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.  
  • மாணவர்களுக்கு அஞ்சல்தலைகள், நாணயங்கள் சேகரிக்கும் செயல்பாடுகள் அளிக்கப்பட்டன.
  • உங்கள் ஊரில் உள்ள குளங்கள், ஆறுகள், பெரிய முது மரங்கள் பற்றிய விவரங்களை எழுதிவரச் செய்தல்.
 
 
 
 
 
பொறுப்பாசிரியர்                                        தலைமையாசிரியர்
 
(மு.சிவகுருநாதன்)                                             (சீ.பத்மாவதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக