தொன்மைப் பாதுகாப்பு மன்றம் (Heritage Club)
தொடக்க விழா
அரசு மேல்நிலைப் பள்ளி
காட்டூர் – 610104
திருவாரூர் மாவட்டம்
இன்று (23.06.2017) எம்பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் (Heritage Club) முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியை திருமதி சீ.பத்மாவதி அவர்கள் தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
மன்ற உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் (Heritage Club) நோக்கங்கள் விளக்கப்பட்டன. இக்கல்வியாண்டிற்கான செயல்பாடுகள் இனங்காணப்பட்டது.
மன்ற உறுப்பினர்கள்:
க.விஷ்வா 6
கு.கிருஷ்ணகுமார் 6
பி.பிரியதர்சினி 6
ம.மதுமிதா 6
ஜெ.கிருபாகரன் 7
ரா.ராமகிருஷ்ணன் 7
சா.சந்திரமௌலீஸ்வரன் 7
பூ.ஜனனி 7
க.கல்பனா 7
வீ.பைங்குழலி 8அ
ர.ரோஜாதஸ்லீம் 8அ
கா.பௌத்ரா 8அ
க.அபர்நாத் 8அ
கு.சூர்யா 8அ
பா.கீர்த்தனா 8ஆ
ம.சுபிதா 8ஆ
பா.தனுஷ் 8ஆ
ஜெ.ஆகாஷ் 8ஆ
சு.அபிநயா 8ஆ
ம.ஆதித்யன் 9அ
செ.ஹரிஸ்குமார் 9அ
ஆ.சுவிதா 9அ
ர.வர்ஷா 9அ
அ.நிர்மலா 9அ
ஶ்ரீ.சுவலெட்சுமி 9அ
செ.ஆஷிகா 9அ
பா.பிரதிபா 9ஆ
செ.ஈஸ்வரி 9ஆ
மு.பெனாசீர் பேகம் 9ஆ
அ.பூங்குழலி 9ஆ
மு.ஆகாஷ் 9ஆ
மூ.கோகுல்ராஜ் 9ஆ
தி.திவாகரன் 9ஆ
சௌ.தியாகேசன் 10அ
மு.முஜிப் 10அ
ஹ.ஹசன் 10அ
ச.லெட்சுமி 10அ
கோ.சஷ்டிதா 10அ
பா.வெங்கடேசன் 10ஆ
நா.சாமி கார்த்திகன் 10ஆ
தெ.ஹரிஹரன் 10ஆ
ர.சந்தியா 10ஆ
ஆ.காவியா 10ஆ
ப.ஜெயப்பிரகாஷ் 11அ
சீ.சண்முகப்பிரியா 11அ
மன்றத்தின் நோக்கங்கள்:
- தொன்மை என்பதை உணர்தல் / அறிந்துகொள்ளுதல்.
- நமது நாடு/மாநிலம்/மாவட்டம்/ஊர் ஆகியவற்றின் வரலாறு மற்றும் தொன்மையை அறிதல்.
- அவற்றை இனம் காணுதல் / பாதுகாத்தல் / பராமரித்தல்.
- வரலாற்று நிகழ்வுகளைப் புரிந்துகொள்ளுதல் / ஆய்வு செய்தல் / குறிப்புகள் எழுதுதல்.
- அய்.நா.சபையின் யுனெஸ்கோ நிறுவனம் பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க எடுத்துவரும் நடவடிக்கைகளைத் தெரிந்துகொள்ளல்.
- யுனெஸ்கோ பட்டியலில் உள்ள நமது நாட்டு/மாநில பண்பாட்டுச் சின்னங்களை அறிதல்.
- சாதி/சமய/இன/மொழி வேறுபாடுகளைக் கடந்து சகிப்புணர்வுடன் வாழக் கற்றல்.
- இயற்கையைப் புரிந்துகொள்ளுதல் / பாதுகாத்தல் / நேசித்தல்.
- சுற்றுச்சூழலைப் பேணுதல்.
மன்றச் செயல்பாடுகள்:
- உனது ஊரில் உள்ள ஆறுகள், குளங்கள், முதுமரங்கள் பற்றிய விவரங்கள் சேகரித்தல்.
- பழங்கால / தற்கால நாணயங்கள் சேகரிப்பு.
- உள்நாட்டு / வெளிநாட்டு நணயங்கள் சேகரிப்பு.
- உள்நாட்டு / வெளிநாட்டு அஞ்சல் தலைகள் சேகரிப்பு.
- இதழ்களில் வரும் வரலாறு தொடர்பான செய்திகளைச் சேகரித்தல் / தொகுத்தல்.
- களப்பயணம் / கள ஆய்வு.
சில இடங்கள்
ஓடம்போக்கி ஆறு, வெட்டாறு, வாளவாய்க்கால் ஆகிய ஆறுகள்.
குளங்கள்: காட்டூர்: பழைய, புதிய காளியம்மன் கோயில் குளங்கள், அரசமரத்துக் குளம், தாமரைக்குளம், சத்திரங்குளம் (பெட்ரோல் பங்க் அருகில்).
அகரத்திருநல்லூர் குளங்கள்: வீரப்பங்குளம், அரசங்குளம், வெட்டுக்குளம், தாமரைக்குளம்.
காட்டூர், அகரத்திருநல்லூரில் உள்ள முதுமரங்கள் உள்ள இடங்கள்.
விளமல் கல் பாலம் (1912 இல் கட்டப்பட்டது.)
தீபங்குடி சமணப்பள்ளி (முதல் தீர்த்தங்கரர் ரிஷபதேவர் – ஆதிபகவன் – திகம்பரச் சமணர் கோயில்)
திருவாரூர் அருங்காட்சியகம்
அருங்காட்சியக வாயிலில் உள்ள கண்டிரமாணிக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட பெரிய புத்தர் சிலை.
திருவாரூர் கோயில்/கல்வெட்டுகள்.
தெப்பக்குளம் – கமலாலயம் - தொன்மை– நமிநந்தியடிகளின் பெரிய புராணப்பாடல்.
பெரும்பண்ணையூர் தேவாலயம் (14.04.1872 இல் அடிக்கல் இடப்பட்டு, 1915 - 1919 ஆண்டுகளில் முடிக்கப் பெற்றது.)
திருக்கண்ணங்கமங்கை பெருமாள் கோயில்.
திருக்கண்ணமங்கை கோயில் அருகே உள்ள சிதிலடந்த கோயில் மற்றும் மண்டபம்.
விளமல் சிவன் கோயில் (பதஞ்சலி முனிவர்)
அண்டார்டிகா பனிக்கட்ட தட்சண கங்கோத்ரி ஆய்வுக்கூடத்தில் பணிபுரிந்த கர்னல் பா.கணேசன் அவர்களால் அமைக்கப்பட்ட அகத்தூண்டுதல் பூங்கா சன்னாநல்லூர்.
முத்துப்பேட்டை ஜாம்பனோடை தர்கா மற்றும் நாகூர் தர்கா (இஸ்லாமிய பக்தி இயக்கம், சூஃபிகள் – அடக்கத்தலம்)
முத்துபேட்டை சதுப்புநிலக்காடுகள் (அலையத்திக் காடுகள்)
வடுவூர் ஏரி, பறவைகள் புகலிடம்.
உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் புகலிடம்.
கோடியக்கரை வனவிலங்குகள் மற்றும் பறவைகள் புகலிடம்.
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள சோழர் கால கோயில்கள் (தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாரசுரம்)
பொறுப்பாசிரியர் தலைமையாசிரியர்
(மு.சிவகுருநாதன்) (சீ.பத்மாவதி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக