ஆகஸ்ட் 18, 2017 (18.08.2017) அன்று மாலை
4.30 மணிக்கு எம்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் கூடியது. மன்ற உறுப்பினர்கள்
கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பின்வரும் செயல்பாடு உதாரணத்துடன் செய்து காட்டப்பட்டது.
இன்றைய செய்திகள் நாளைய வரலாறு என்பார்கள்.
நாளிதழ்களையும் நல்ல நூல்களையும் வாசிக்கும் பழக்கம் இனிமையானது. அவற்றைக் கைக்கொள்ளவேண்டும்.
நாளிதழ்களில் அன்றாடம் வெளிவரும் செய்திகளில் பழங்கால
வரலாறு மற்றும் தொன்மை பற்றிய செய்திகள் நிரம்ப
உண்டு. அவற்றைச் சேகரித்து, வெட்டி ஒட்டி ஆல்பம் அல்லது துணுக்குப் புத்தகம் தயாரிக்கும் செயல்பாடு இன்றைய
கூட்டத்தில வழங்கப்பட்டது. சில செய்தித் துணுக்குகளில் மாதிரிகள் காண்பிக்கப்பட்டது.
எழுத்தாக்கம்:
மு.சிவகுருநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக