பிற்காலச் சோழர்கள்
.மு.சிவகுருநாதன்
- விஜயாலய சோழன் (கி.பி. 846 – கி.பி. 881)
- முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871 – கி.பி. 907)
- முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 – கி.பி. 953)
- கண்டராதித்த சோழன் (கி.பி. 950 – கி.பி. 957)
- அரிஞ்சய சோழன் (கி.பி. 956 – கி.பி. 957)
- இரண்டாம் பராந்தக சோழன் (கி.பி. 957 – கி.பி. 970)
- உத்தம சோழன் (கி.பி. 970 – கி.பி. 985)
- முதலாம் ராஜராஜ சோழன் (கி.பி. 985 – கி.பி. 1014)
- முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1012 – கி.பி. 1044)
- முதலாம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1018 – கி.பி. 1054)
- இரண்டாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1051 – கி.பி. 1063)
- வீர ராஜேந்திர சோழன் (கி.பி. 1063 – கி.பி. 1070)
- அதி ராஜேந்திர சோழன் (கி.பி. 1067 – கி.பி. 1070)
- முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 – கி.பி. 1120)
- விக்கிரம சோழன் (கி.பி. 1118 – கி.பி. 1136)
- இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1133 – கி.பி. 1150)
- இரண்டாம் ராஜராஜ சோழன் (கி.பி. 1146 – கி.பி. 1163)
- இரண்டாம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1163 – கி.பி. 1178)
- மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 – கி.பி. 1218)
- மூன்றாம் ராஜராஜ சோழன் (கி.பி. 1216 – கி.பி. 1256)
- மூன்றாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1246 – கி.பி. 1279)
சில குறிப்புகள்:
பல அரசர்களுக்கு அவர்கள் இளவரசுப் பட்டம் ஆண்டிலிருந்து காலகட்டம் குறிக்கப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்க.
ஏழாம் வகுப்பு சமூக அறிவியலில் ‘தென்னக அரசுகள்’ என்னும் பாடத்தில் 18 மன்னர்கள் பட்டியலிடப்படுகிறார்கள். அதில் ஆதித்தன் (ஆதித்த கரிகாற் சோழன்) (கி.பி. 956 – கி.பி. 966) என்று உள்ளது. இரண்டாம் பராந்தக சோழனின் (கி.பி. 957 – கி.பி. 970) மகனான ஆதித்த கரிகாலன் (கி.பி. 966 – கி.பி. 969) கி.பி. 966 இல் இளவரசு பட்டமேற்று மூன்றாண்டுகளில் கி.பி. 969 இல் படுகொலை செய்யப்பட்டவன். எனவே இவரை அரசர் பட்டியலில் கொள்வது தவறன்றோ!
இந்தப் பட்டியலில் முதல் 13 அரசர்கள் விஜயாலய சோழன் (கி.பி. 846 – கி.பி. 881) முதல் அதி ராஜேந்திர சோழன் (கி.பி. 1067 – கி.பி. 1070) ஈறாக 13 பேர்,ஆண் வழிச் சமூக அமைப்பில் விஜயாலய சோழன் மரபாகச் சொல்லப்படுகின்றனர்.
முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1070 – கி.பி. 1120) வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தனுக்கும் முதலாம் ராஜேந்திர சோழனின் (கி.பி. 1012 – கி.பி. 1044) மகள் அம்மங்காதேவிக்கும் பிறந்தவன். இவனும் இவனுக்குப் பின்னால் வரும் 8 அரசர்கள் கீழை சாளுக்கிய மரபினர் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக