ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

முதுமரங்களைத் தேடி…


முதுமரங்களைத் தேடி…





 

    திரு நக்கீரன் அவர்களின் ‘காடோடி’ நாவலில் வரும் மூதாய் மரத்தைப் போன்ற தொன்மையான மரங்கள் உள்ளூரில் எங்கு இருக்கிறது என்று விசாரித்து, கூடவே இரு மாணவர்களின் துணையோடு ஒரு மூது மரத்தைத்தேடி அகரத்திருநல்லூர் ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்றோம். அங்குள்ள சுடுகாட்டில்  ஒரு முதுமரத்தைக் கண்டு மகிழ்ந்து, படமெடுத்துத் திரும்பினோம்.


    என்னுடன் வந்த குபேஷ் என்னும் மாணவர் தனது அய்யா (தாத்தா) காலத்திருந்து இந்த மரம் இருக்கிறது என்பதை தாத்தா மூலம் அறிந்திருந்தார். பலமுறை இந்த முதுமரத்தை வெட்டும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது என்றும் சொன்னார். இவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என்று தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தில் வலியுறுத்தப்பட்டது.
 




   மேலும் தொன்மை என்பது வெறும் பழங்கால கட்டிடங்கள் மட்டுமல்ல. மனிதர்கள், மண், மலைகள், காடுகள், குளங்கள், ஏரிகள், ஆறுகள், கடல்கள் ஆகியன தொன்மையானதுதான் என்று சொன்னபோது, ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் “நமது மொழியும் தொன்மையானது”, என்றார். தொன்மை என்பது மாணவர்களுக்கு எளிதில் விளங்கிவிட்டது.
 



 எழுத்தாக்கம்:

மு.சிவகுருநாதன்

2 கருத்துகள்: