ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

நாணயங்கள், அஞ்சல் தலைகள் சேமிப்பு


நாணயங்கள், அஞ்சல் தலைகள் சேமிப்பு


      28.07.2017 அன்று மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற நம் பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தகவல்கள் பேசப்பட்டன.


   நாணயவியல்   (Numismatics) என்பது நாணயம் மற்றும் அவை சார்ந்த வரலாறு தொடர்பான அறிவியல்துறையாகும். நாணயச் சேகரிப்பு மட்டுமல்லாது பண்டமாற்றம், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பற்றியது இத்துறையாகும்.


  நாணயங்கள் சேகரிப்பு என்பது  ஒரு சிறந்த பொழுதுபோக்குப் பணி; கூடவே இவற்றிற்கான மதிப்பு மிக அதிகம். வட்ட, மாவட்ட, மாநில, இந்திய, உலக அளவில் உள்ள அமைப்புகள் மூலம் நாணய சேகரிப்பாளர்கள் சமூகமாக இணைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பரந்த தொடர்பு கிடைப்பது கூடுதல் பலன்.


  இது மாணவர்களுக்கு வரலாறு கற்றலுடன் இணைந்த ஒரு இன்பமூட்டும் அனுபவமாகும். எனவே பழங்கால நாணயங்கள் கிடைக்காவிட்டாலும், தற்போது புழக்கத்தில் இருக்கும் நாணயங்கள், பயன்பாட்டில் இல்லாத செல்லாத நாணயங்கள், அயல்நாட்டு நாணயங்கள் ஆகியவற்றைச் சேகரிக்கலாம்.


   இதனுடன் கூடவே இந்திய, பன்னாட்டு அஞ்சல் தலைகள் சேகரிப்பும் எடுத்துக் கூறப்பட்டது. நாணயங்கள், அஞ்சல் தலை சேகரிப்புக்கு மாதிரிகள் காட்டப்பட்டன.


எழுத்தாக்கம்:
மு.சிவகுருநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக