மெல்லக் கற்போருக்கான செயல்திட்டம் – சமூக அறிவியல்
அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் – 610104, திருவாரூர் – மாவட்டம்.
- 2017 – 2018 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவில் மெல்லக் கற்போர் 6 பேர் இனங்காணப் பட்டனர்.
- இவர்கள் அனைவருக்கும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் (RMSA) மெல்லக் கற்போருக்குக்கான (SLAP) கையேடுகள் வழங்கப்பட்டன.
- இவர்களில் ஒருவரைத் தவிர எஞ்சிய ஐவரும் மதிய உணவிற்கு வீடுகளுக்குச் செல்கின்றனர்.
- இந்த ஐவரும் மதிய உணவு எடுத்துவர அல்லது சத்துணவு சாப்பிட கேட்டுக் கொள்ளப் பட்டது.
- மதிய உணவு இடைவேளையில் சுமார் 15 நிமிடங்கள் ஒதுக்கி அதில் சமூக அறிவியல் கட்டங்களிலிருந்து சில பகுதிகளை தினமும் படிக்க, எழுத ஆலோசனை வழங்கப் பட்டது.
- இந்த 6 பேருக்கும் படிப்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்க அவர்களது விருப்பத்தின் பேரில் நன்றாக படிக்கும் மாணவர்கள் வழிகாட்டுநர்களாக நியமிக்கப்பட்டனர்.
- எழுத, படிக்க வாய்ப்புள்ள உரிய தருணங்களில் குழுக் கற்றல்.
- இவர்களது வருகைப் பதிவு குறைவாக உள்ளது. தினசரி வருகைப்பதிவையும் சிறப்பு வகுப்பில் பங்கேற்பதையும் உறுதி செய்தல்.
- வெள்ளி காலை, மாலை சமூக அறிவியல் சிறப்பு வகுப்புகளில் இவர்களுக்குத் தனிக்கவனம்.
- ஆசிரியர் இல்லாத பதிலிப் பாடவேளைகள் மற்றும் விடுமுறை நாள்களில் இவர்களது விருப்பத்தையொட்டி சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சியளித்தல்
மு.சிவகுருநாதன், சமூக
அறிவியல் பாட ஆசிரியர்
அ.மே.நி.ப., காட்டூர்
– 610104.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக